Featured Section
Contact form
Search This Blog
Footer Copyright
Popular Posts
Nextiva
History of Bear Grylls in tamil part 1- பியர் கிரில்ஸின் வாழ்க்கை வரலாறு தமிழில் பகுதி 1
நிச்சயம் இவருக்கு அறிமுகம் தேவையில்லை. டிஸ்கவரி சேனல் மூலமாக நம் வீட்டிற்குள் நுழைந்து நாடோடியாகவும், காடோடியாகவும் வாழ்ந்துக் கொண்டிருப்பவர் தான் இந்த பியர் கிரில்ஸ். அவர் செல்லும் வழியில் இடைமறைக்கும் எந்த உயிரினமும் அவரது உணவுப் பட்டியலில் இடம்பெறும் . மேன் vs வைல்ட்(Man vs Wild) நிகழ்ச்சியை நாம் விரும்பிப் பார்க்க மற்றுமொரு காரணமும் உண்டு. வீட்டில் இருந்தப் படியே, அமேசான் மழைக்காடுகள் பற்றியும் , சஹாரா பாலைவனத்தின் சுட்டெரிக்கும் வெயிலையும், எலும்பை உறுக்கும் ஆர்டிக் மண்டலத்தைப் பற்றியும் தெரிந்துக் கொள்ள இம்மாதிரியான நிகழ்ச்சிகளை விட்டால் நமக்கு வேறு வழியுமில்லை. மனிதர்களே இல்லாத இடத்தில், இயற்கையோடு போராடி உயிர் பிழைப்பது தான் இந்த நிகழ்ச்சியின் கரு. பல வருடங்களாக மெகா ஹிட் அடித்து வரும் இந்நிகழ்ச்சியில் ஹாலிவுட் பிரபலங்களும், ஒபாமா உள்ளிட்ட சர்வதேச தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். சாகசத்திற்காக பிறந்த இவர் வாழ்நாளில் செய்த சாகசங்கள் ஏராளம்.
பியர் கிரில்ஸின் ஆரம்பம்:
வடக்கு அயர்லாந்தில் உள்ள டோனாகட்டியில் மைக்கேல் கிரில்ஸ்க்கும்- சாரா தம்பதியருக்கு பிறந்த முதல் குழந்தை லாரா தனக்கு ஒரு தம்பி வேண்டும் என்பது லாராவின் விருப்பம். ஆனால் சாராவிற்கோ தொடர்ந்து மூன்று முறை கரு வயிற்றில் நிற்கவில்லை. நான்காம் முறை கர்ப்பம் அடைந்த போதும் உடல்நலக் குறைவால் 9 மாதங்கள் படுக்கையிலேயே படுத்தார்.1974 ஆம் ஆண்டு ஒருவழியாக பிறந்தது ஆண் குழந்தை. அந்த குழந்தைக்கு எட்வர்ட் கிரில்ஸ் எனப் பெயர் வைத்தனர். ஆனால் அக்கா லாராவிற்கோ அந்த பெயர் பிடிக்கவில்லை. அவளாகவே யோசித்து தம்பிக்கு டெடி பியர் என பெயர் வைத்து கொஞ்சினால், அதுவே காலப்போக்கில் பியர் கிரில்ஸ் என ஆயிற்று. சிறுவயதிலிருந்தே வித்தியாசமான அனுபவங்களுக்கு அடிமையான பியர் கிரில்ஸ். சாதரண வாழ்க்கையை வெறுக்கத் தொடங்கிய பியர் கிரில்ஸ் பையை மாட்டிக்கொண்டு வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினார். வெளியே தேவையான அளவு த்ரில் செய்துவிட்டு பணம் காலியன சமயத்தில் மீண்டும் வீடு திரும்பினார் பியர் கிரில்ஸ். பியரின் தாத்தா இரண்டாம் உலகப்போரில் பங்கெடுத்தவர் என்பதால் , தனது ஒய்வு நேரத்தில் பேரக் குழந்தைகளிடம் போர் அனுபவத்தை கதைகளாக கூறுவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆரம்பத்தில் ஆர்வமில்லாமல் கேட்டு வந்த பியர் கிரில்ஸுக்கு பின்னர் தான் சூட்சமம் புரிந்தது. காரணம் தாத்தாவின் கதைகளில் வரும் சம்பவங்கள் அனைத்தும் திரில்லர் ஆக இருந்தது. அதனால் வேலைக்கு சென்றால் இராணுவத்திற்கு மட்டும் தான் செல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் பியர் கிரில்ஸ்.
Click to get tweetfull free trail.
விடாமுயற்சியால் வீறுநடைப் போட்டவர்:
ஒருமுறை இந்தியாவில் இருந்த குடும்ப நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் மழையேற்ற பயிற்சிக்காக பியரும் , அவரது நண்பரும் முதல் முறையாக இந்தியா வந்தனர். இமயமலை பகுதிகளில் விதவிதமான பயிற்சிகளை எடுத்தனர். பல மாத பயிற்சிகளுக்கு பின் கொல்கத்தாவிற்கு சென்றார். அன்னை தெரேசாவுடன் சந்திப்பு என த்ரில்லுடன் சேர்த்து நெகிழ்வான நினைவுகளுடன் பிரிட்டன் திரும்பினர். இராணுவத்தில் சேருவதற்கான வயது எட்டியதும் பிரிட்டிஷ் இராணுவத்தின் சிறப்புப் படையான SAS ஸ்பெஷல் ஏர் சர்வீஷ் தேர்வுக்காக சென்றார். முதல் தேர்வில் நூலிழையில் தனக்கான இடத்தை தவறவிட்ட பியர் கிரில்ஸ். அடுத்த சில மாதங்களிலேயே அடுத்த தேர்வில் கலந்துக்கொண்டார். இந்த முறை தேர்வில் வெற்றிப் பெற்று இராணுவ வீரர் ஆனார் பியர் கிரில்ஸ். 1996 ஆம் ஆண்டு ஜாம்பியவில் இருந்த போது பணிநிமித்தமாக ஹெலிகாப்டரில் இருந்து குதிக்க வேண்டிய கட்டாயம். சுமார் 16000 ஆடி உயரத்தில் இருந்து குதித்தார் 3000 அடி உயரத்தில் அடைந்த போது பாரஷூட்டை விரிக்க முயன்றார் ஆனால் துரதிர்ஷ்டவசமாக பாரஷீட் விரியவில்லை. விளைவு பியரின் உடல் வேகமாக தரையை நோக்கி நெருங்கியது. அவர் தரையில் விழுந்ததும் முதுகெலும்பு மூன்று துண்டுகளாக நொறுங்கியது. பல மாதம் படுத்த படுக்கையாக கிடந்தார். வலி, வேதனை அறுவை சிகிச்சைகள் மீண்டும் எழுந்து நடப்பதே சந்தேகம் என மருத்துவர்கள் கூறினார்கள்.உடைந்துப் போனார் பியர் கிரில்ஸ் , ஆனால் அவர் நம்பிக்கையை இழக்கவில்லை, முதலில் மனதால் எழுந்தார் பின் உடலால் நிமிர்ந்தார். பலமாத விடாமுயற்சி மற்றும் பயிற்சியால் சகஜ நிலைக்கு திரும்பினார். அதே நேரத்தில் அவரது இராணுவ வேலைக்கும் ஆரம்பித்த வேகத்திலேயே முற்றுக்கட்டை போடப்பட்டது.
கனவுகளை நனவாக்கினார்:
இதனால் சிறிதும் மனம் தளராத பியர் கிரில்ஸ், தனது சிறுவயது கனவை நனவாக்க தயாரானார். அந்த கனவு தான் எவரெஸ்ட் ஏறுவது. மருத்துவர்கள் கூறியும் தனது முடிவை பின்வாங்கவில்லை. தனது செலவுகளுக்காக ஸ்பான்சர் தேடி அலைந்து பியர் கிரில்ஸ் இறுதியாக லண்டனைச் சேர்ந்த DAVIS LANGDON EVEREST எனும் நிறுவனத்தை பெரும்பாடு பட்டு சம்மதிக்க வைத்தார். எவரெஸ்டின் உச்சியில் DLE ன் கொடியை பறக்க விடுவேன் என உறுதியளித்தார். எவரெஸ்டில் ஏறுவதற்கு முன்னோட்டமாக ஸ்காட்லாந்தின் மலைகளில் பயிற்சி எடுத்தார் பியர் கிரில்ஸ். மலையேற்றத்தின் போது உடன் வந்த பெண்ணான சாரவுடன் பியருக்கு நட்பு துளிர்த்தது. அது காதலாக மாறினாலும் தனது லட்சயத்திற்காக காதலுக்கு ஓய்வளித்து 1998 ஆம் ஆண்டு நேபாளத்தை சேர்ந்த ஒரு குழுவுடன் எவரெஸ்ட் ஏறச் சென்றார் பியர் கிரில்ஸ். த்ரில் த்ரில் என சுற்றிக்கொண்டிருந்த பியர் கிரில்ஸ்க்கு த்ரில்லின் மறு பக்கத்தையும் கற்றுக்கொடுத்தது எவரெஸ்ட். ஆனால் மனம் தளராத பியர் கிரில்ஸ் 1998 ஆம் ஆண்டு மே-26 ஆம் தேதி காலை 7:22 க்கு உலகின் உச்சியில் நின்றபடி சாகசப் புன்னகை பூத்தார்.அவர் இந்த சாதனையை செய்யும் போது அவருக்கு வயது 23.அப்படியென்றால் பியர் கிரில்ஸின் மனோதிடமும் , உழைப்பும் எப்படி இருந்திருக்கும் என்று ஊகித்து கொள்ளலாம். மிகச்சிறிய வயதில் எவரெஸ்ட் ஏறியவர் என்ற கின்னஸ் சாதனையையும் படைத்தார் பியர் கிரில்ஸ். அதுவும் முதுகெலும்பு மூன்று துண்டுகளான எட்டு மாதங்களில் இச்சாதனையை நிகழ்த்தினார் பியர் கிரில்ஸ். தடைகள் பல கடந்து, இன்றளவும் வெற்றி நடைப் போட்டுக் கொண்டிருக்கும் பெயரின் வாழ்க்கை வரலாற்றை இங்கு பதிவு செய்வதில் பெருமையளிக்கிறது, இதன் தொடர்ச்சியை அடுத்தப் பதிவில் காண்போம்.
History of Bear Grylls part 2...
1 comment